ரஷியாவில் புதிதாக 4,969 பேருக்கு தொற்று; பாதிப்பு 9,22,853 ஆக அதிகரிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,969 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,969 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 4,969 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,22,853 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் உள்பட இதுவரை 15,685 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 7,32,968 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 3,557 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி, 2,29,888 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 3.25 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 688 பேர் உள்பட இதுவரை 2,52,374 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com