பிரபல நடிகர் டிகாப்ரியோவிற்கு பிரேசில் அரசு அழைப்பு

அமேசான் காட்டில் ஏற்படும் தீ விபத்து குறித்து நேரில் வந்து பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்குமாறு பிரபல ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவுக்கு பிரேசில் துணை அதிபர் ஹாமில்டன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ
ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ

அமேசான் காட்டில் ஏற்படும் தீ விபத்து குறித்து நேரில் வந்து பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்குமாறு பிரபல ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவுக்கு பிரேசில் துணை அதிபர் ஹாமில்டன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரான லியோனார்டோ பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக கருத்து தெரிவித்து வருகிறார். அமேசான் காட்டுத் தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்த டிகாப்ரியோவுக்கு பிரேசில் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானில் அதிகரித்து வரும் காட்டுத் தீ விபத்துகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் பிரேசில் அரசு மீது தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நிகழ்ந்த காட்டுத் தீ விபத்து குறித்து ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கருத்து தெரிவித்திருந்தார்.

டிகாப்ரியோ விமர்சனத்திற்கு பதிலளித்த பிரேசிலிய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, அமேசானில் ஏற்படும் தீ விபத்துக்கு நிதியுதவி செய்ததாக டிகாப்ரியோ மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பிரேசிலின் துணை அதிபர் ஹாமில்டன் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவை அமேசானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

“டிகாப்ரியோ அமேசானில் எட்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் அமேசான் ஒரு தட்டையான நிலம் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்வார்.” என அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

பிரேசிலில் கடந்த 12 மாதங்களில் காடழிப்பு 34.5% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com