மரபணு மாற்ற கொசுக்கள்: புளோரிடாவுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல்

புளோரிடா மாகாணத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மரபணு மாற்ற கொசுக்கள்: புளோரிடாவுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல்
மரபணு மாற்ற கொசுக்கள்: புளோரிடாவுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல்
Published on
Updated on
1 min read

புளோரிடா மாகாணத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகில் கொடிய மற்றும் ஆபத்தை விளைவிக்கும் உயிராக கொசு பார்க்கப்படுகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களினால் இறக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் மலேரியாவைக் கட்டுப்படுத்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் பெண் கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் புளோரிடா மாகாணம் முழுவதும் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை விடுவிக்க அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை பரப்புகின்றன. மலேரியா, சிக்கன் குனியா, ஜிகா வைரஸ் போன்ற கொசுக்கடியால் ஏற்படும் நோய்களைத் தடுக்க பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு மாற்றாக இந்த முறை சாத்தியமாக உள்ளதா என அறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு செவ்வாயன்று அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒப்புதல் கிடைத்த பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 கோடிக்கும் அதிகமான மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் புளோரிடா  வெளியிடப்படும். 

மே மாதத்தில், அமெரிக்க சுற்றுச்சூழல் நிறுவனம் பிரிட்டனில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸிடெக் நிறுவனத்திற்கு மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஆண் ஈடிஸ் ஈஜிப்டி கொசுக்களை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அவை OX5034 என அழைக்கப்படுகின்றன. "இந்தக் குறிப்பிட்ட கொசுக்கள் ஆண்களாகும்.  அவை ஒரு புரதத்தை எடுத்துச் செல்ல மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவை  பெண் கொசுக்களுடன் இணைந்திருக்கும்போது  பெண் சந்ததியினரின் உயிர்வாழ்வைத் தடுக்கும், "என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com