ரஷியாவிலிருந்து இறக்குமதியாகும் கோழி இறைச்சிக்கு ஹாங்காங் அரசு தடை

பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் ரஷியாவிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்யப்படுவதை தற்காலிகமாக நிறுத்த ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு ஆணையம் புதன்கிழமை முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் ரஷியாவிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்யப்படுவதை தற்காலிகமாக நிறுத்த ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு ஆணையம் புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

ரஷியாவின் ஓம்ஸ்காயாவில் எச்5 நோய்க்கிருமிகள் பரவலின் காரணமாக பறாவைக்காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துருந்தது. இதனைத் தொடர்ந்து  ஹாங்காங் அரசாங்கத்தின்  உணவு  ரஷியாவிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது.

ஹாங்காங்கில் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டை உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களில் ரஷியாவிலிருந்து சுமார் 140 டன் கோழி இறைச்சியை ஹாங்காங் இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com