வளர்ப்பு நாயுடன் விளையாட்டு: ஜோ பைடன் காயம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
'மேஜருடன்' ஜோ பைடன்.
'மேஜருடன்' ஜோ பைடன்.
Published on
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

இரண்டு வயது ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த நாய் "மேஜருடன்' கடந்த சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நேரிட்டது. 

 பைடனின் மருத்துவரான கெவின் ஓகானர், அவருக்குப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். இது குறித்து மருத்துவர் கெவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவரது நடு காலில் நூலிழை அளவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

 பைடன் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் உள்ளார். அவருக்கு புகையிலைப் பொருள்கள், மதுப் பழக்கங்கள் இல்லை. வாரத்தில் 5 நாள்கள் உடற்பயிற்சி மேற்கொள்கிறார். அமில சுரப்பு, கொலஸ்ட்ரால், பருவகால ஒவ்வாமை ஆகியவற்றுக்குத் தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். பைடனின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடன் தனது 78- ஆவது பிறந்த நாளை கடந்த நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடினார். வரும் ஜனவரி 20- ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கும்போது மிக அதிக வயதில் அமெரிக்க அதிபரானவர் என்று அறியப்படுவார்.

பைடன், மேஜர் என்ற மீட்புப் பணி நாயை கடந்த 2018- இல் தத்தெடுத்தார். இதேபோல சாம்ப் என்ற மற்றொரு ஜெர்மன் ஷெப்பர்டு நாயை கடந்த 2008- இல் தத்தெடுத்தார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பலரும் நாய்கள் உள்ளிட்ட தங்களது வளர்ப்பு பிராணிகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறியுள்ளனர்.

தற்போதைய அதிபர் டெனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் வளர்ப்பு பிராணிகள் எதையும் தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. கடந்த 100 ஆண்டுகளில் வளர்ப்பு பிராணிகள் இல்லாத முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவார்.

சீக்கிரம் குணம் அடைந்து வாருங்கள்'' -அதிபர் டிரம்ப் சுட்டுரை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com