அர்னாப் கோஸ்வாமிக்கு 20,000 பவுண்டுகள் அபராதம்: பிரிட்டன் அரசு உத்தரவு

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு பிரிட்டன் அரசு 20000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி
தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி
Published on
Updated on
1 min read

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு பிரிட்டன் அரசு 20000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.

பிரிட்டன் நாட்டில் ரிபப்ளிக் பாரத் என்ற இந்தி செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அர்னாப் கோஸ்வாமி பாகிஸ்தான் நாட்டைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது எனத் தெரிவித்திருந்த கோஸ்வாமி இந்தியா விஞ்ஞானிகளை உருவாக்குகிறது ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது எனத் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பிற சமூகங்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு 20000 பவுண்டுகள்( இந்திய மதிப்பில் ரூ.19.73 லட்சம்) அபராதம் விதித்து ஐக்கிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இனவெறி கொண்ட கருத்துக்களை பிரிட்டனால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com