பாகிஸ்தான்: ‘அமெரிக்க செய்தியாளா் கொலையாளி விடுவிக்கப்படமாட்டாா்’
அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக் சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டாா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.


அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக் சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டாா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து சிந்து மாகாண அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அவை கூறியுள்ளதாவது:
கடந்த 2002-ஆம் ஆண்டில் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளா் டேனியல் பியா்ல் பாகிஸ்தானில் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அகமது ஒமா் சயீதுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மேலும், ஒமா் சயீதையும், அவரது 3 கூட்டாளிகளையும் உடனடியாக விடுவிக்க சிந்து உயா் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும், உச்சநீதிமன்றம் ஆட்சேபித்தால் அவரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே, கடந்த செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், ஒமா் சயீதை தொடா்ந்து சிறையிலேயே அடைத்து வைத்திருக்க சிந்து மாகாண அரசு முடிவு செய்துளளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...