அகாடமி விருதுகள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தொகுப்பாளர் இல்லை!

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஏபிசி மற்றும் தி அகாடமி  நிகழ்வுக்கு தொகுப்பாளர் இன்றி முடிவு செய்துள்ளன.
அகாடமி விருதுகள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தொகுப்பாளர் இல்லை!

கடந்த ஆண்டு அகாடமியில் தொகுப்பாளர் இன்றி நடந்ததைத் தொடர்ந்து, 2020 ஆண்டு ஆஸ்கார் விருதுக்கும் தொகுப்பாளர் இருக்காது என்று அறிவித்துள்ளார் ஏபிசி என்டர்டெயின்மென்ட்டின் தலைவர் கரே பர்க்.

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஏபிசி மற்றும் தி அகாடமி  நிகழ்வுக்கு தொகுப்பாளர் இன்றி முடிவு செய்துள்ளன.

அமெரிக்காவின் பசடேனாவில் தொலைக்காட்சி விமரிசகர்கள் சங்கத்தின் குளிர்கால பத்திரிகை சுற்றுப்பயணத்தில் கரே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

விருது வழங்கும் செயல்பாடு கடந்த ஆண்டைப் போலவே நிகழும் என்பதை வலியுறுத்தி பர்க் கூறியது: "இந்த ஆண்டு பாரம்பரிய தொகுப்பாளர்கள் இல்லை என்பதை அகாடமியுடன் சேர்ந்து இப்போது உறுதிப்படுத்துகிறேன்" என்றார்.

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அளித்த பேட்டியில், 2019 விருதை வெற்றிகரமாக மாற்றிய அதே மந்திரத்தை ஏபிசியும் அகாடெமியும் பின்பற்ற விரும்புகின்றன என்று பர்க் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த ஆண்டு நிகழ்ச்சி எவ்வாறு சென்றது என்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், போலவே இந்த ஆண்டும் வெற்றிகரமாகவே இருக்கும் என நாங்கள் நம்புகிறோம், நீங்களும் மீண்டும் காண்பீர்கள்," என்று பர்க் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு நடிகர்-நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட்ஸ்தான் இந்த நிகழ்வை தொகுத்து வழங்குவதாகக் இருந்தது, ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு இடையில் சிக்கி, ஓரின சேர்க்கை எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினார் மற்றும் ஓரினச்சேர்க்கை சொற்களைப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.  2019 -இல், அவருக்கு மாற்றாக யாரும் வேண்டாம் என்று அகாடமி முடிவு செய்தது. ஆனால் அதற்குப் பதிலாக தொகுப்பாளர் இல்லாமல் விழாவை நடத்தியது.

எலென் டிஜெனெரஸ், ஜான் ஸ்டீவர்ட், பில்லி கிரிஸ்டல் ஹக் ஜாக்மேன், சேத் மக்ஃபார்லேன், ஜிம்மி கிம்மல், நீல் பேட்ரிக் ஹாரிஸ் மற்றும் கிறிஸ் ராக் ஆகியோர் ஆஸ்கார் விருதுகளின் முந்தைய விருந்தினர்களில் அடங்குவர்.

2010 விழாவை இணை தொகுத்து வழங்க அலெக் பால்ட்வின் மற்றும் ஸ்டீவ் மார்ட்டின் ஆகியோர் கைகோர்த்தனர், அதே நேரத்தில் அன்னே ஹாத்வே மற்றும் ஜேம்ஸ் பிராங்கோ ஆகியோர் இணைந்து 2011 இல் இணைந்து தொகுத்து வழங்கினர்.

92 வது அகாடமி விருதுகள் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com