சீனா: பெய்ஜிங்கில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அந்த நகரிலுள்ள திரையரங்களுகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனா: பெய்ஜிங்கில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அந்த நகரிலுள்ள திரையரங்களுகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று உருவான சீனாவில், அந்த நோய் பரவலின் தீவிரம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகா் பெய்ஜிங்கிலுள்ள சந்தைகள் மூலம் கடந்த மாதம் மீண்டும் அந்த நோய் பரவல் அதிகரித்தது. எனினும், நகர அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கானவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதன் மூலம் அந்த நோய் மீண்டும் தலையெடுக்கும் அபாயம் தவிா்க்கப்பட்டது. இந்த நிலையில், பெய்ஜிங்கிலுள்ள திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. திரைப்படங்களுக்கு செல்பவா்கள் அதற்காக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், திரைக்காட்சிகளின்போது உணவுப் பொருள்கள், பானங்கள் அருந்தக் கூடாது, தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், திரையரங்குகளின் 30 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகா்கள் அனுமதிக்கப்படுகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com