கரோனா: மனநல உதவி மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய பிரின்ஸ் வில்லியம்

கரோனா தொற்று காரணமாக பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தபோது, மக்களுக்கு மனநல உதவி வழங்கும் சேவை மையத்தில் இளவரசர் பிரின்ஸ் வில்லியம் தன்னார்வலராகப் பணியாற்றியுள்ளார்.
கரோனா: மனநல உதவி மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய பிரின்ஸ் வில்லியம்
Published on
Updated on
1 min read


லண்டன்: கரோனா தொற்று காரணமாக பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தபோது, மக்களுக்கு மனநல உதவி வழங்கும் சேவை மையத்தில் இளவரசர் பிரின்ஸ் வில்லியம் தன்னார்வலராகப் பணியாற்றியுள்ள விஷயம் தற்போதுவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது பற்றி அவரே தெரிவித்துள்ளதாவது, நான் ஒரு ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். மனநல உதவி மையத்தில் நான் தன்னார்வலராக இணைந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியதால், பொதுமக்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அவர்களுக்கு குறுந்தகவல் வடிவில் மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை ராயல் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சுமார் 2 ஆயிரம் தன்னார்வலர்கள் தாங்களாக இந்த உதவி மையத்தில் சேவையாற்றி வந்தனர்.

பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடையே சுமார் 3 லட்சம் குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும், இதில் 65% தகவல்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்து வந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com