மதச் சுதந்திரம் மூலம் உலகளவில் குழப்பத்தை உருவாக்கி வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் 2019ஆம் ஆண்டின் உலக மதச் சுதந்திரம் என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மதச் சுதந்திரம் மூலம் உலகளவில் குழப்பத்தை உருவாக்கி வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்
Published on
Updated on
1 min read

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் 2019ஆம் ஆண்டின் உலக மதச் சுதந்திரம் என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், சீனாவின் மதக் கொள்கைகள் குறித்து பல அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதே நாளில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பில், வதந்திக் கருத்துகளை கூறி, சீனாவின் மதக் கொள்கை தொடர்பாக அவதூறு பரப்பினார்.

உள்நாட்டில் இனவெறி பாகுபாட்டை எதிர்த்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை அமெரிக்க அரசு ஒடுக்குவதோடு, வெளிநாடுகளிலும் பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மத நம்பிக்கையாளர்களிடையேயான வெறுப்பு உணர்வு அதிகரித்து வரும் நிலையில், மைக் பாம்பியோ பிற நாடுகளின் மதக் கொள்கையை விமர்சித்துள்ளார். இத்தகைய செயல், முற்றிலும் கேலிக்கூத்தாகும்.

அமெரிக்கா, ‘மதச் சுதந்திரம்’ என்ற பெயரில், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது,  அதன் ஆதிக்கப் போக்கை வெளிப்படுத்தும் செயலாகும். மதச் சுதந்திரம் குறித்து மைக் பாம்பியோ பேசும் போது, அமெரிக்கா மீண்டும் தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டுவதாகவே நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

நீண்டுக்காலமாக, அமெரிக்காவில் மத மோதல் மற்றும் பாகுபாட்டுப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக, தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, உள்நாட்டில் மத சுதந்திர நிலை மிகவும் மோசமாகி வருகிறது. மேலும், கடந்த பல ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்கா போரிட்டுள்ளது. இதன் விளைவாக, கடுமையான மனிதநேய  பேரிடர் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பல்வேறு மதங்களுக்கிடையே பகைமை நிலை தீவிரமாகி,  பயங்கரவாதம் மற்றும் அதி தீவிரவாதம் உலகளவில் பரவி வருகிறது.

உண்மையில், மைக் பாம்பியா போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் பேசி வரும் ‘மனித உரிமை’ மற்றும் ‘சுதந்திரம்’ என்பது,  பிற நாடுகளை அடக்கி ஆள அவர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com