
அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆவணம் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில், சீனாவுக்கு விஓஏ பிரசாரம் செய்ததாக வெள்ளை மாளிசெய்தி ஊடகங்களின் மீதான அமெரிக்க அரசியல்வாதிகளின் தாக்குதல்கை கண்டனம் என்ற சுட்டுரை பதிவை மேற்கொள்காட்டி, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஊடகத் தொடர்பு வாரியம் விஓஏயின் எந்த நேர்காணலையும் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இது, அமெரிக்க அரசு அதன் முக்கிய ஊடகம் ஒன்றின் மீதான பழிவாங்குதல் நடவடிக்கையாகும் என பொதுவாகக் கருதப்படுகிறது.
தொற்று நோய்ப் பரவலின் போது, அமெரிக்க அரசு தேசிய ஒலிபரப்பு நிறுவனம், சி என் என், வாய்ஸ் ஆஃப் அமரிக்கா முதலிய சொந்தநாட்டு செய்தி ஊடகங்களைத் தாக்கி வருகின்றது. குறிப்பாக, இந்த ஊடகங்கள் சீனாவின் தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகள் தொடர்பாக புறநிலையான செய்திகளை வெளியிடுவதற்கு அமெரிக்கத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தவிர, அமெரிக்க அரசியல்வாதிகள் நிர்வாகக் கட்டளை மூலம் சமூக ஊடகங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதோடு, தங்களின் அரசியல் நலனுக்குரிய கருவியாகவும் அவற்றை மாற்ற முயன்று வருகின்றனர்.
அமெரிக்காவின் தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஏற்பட்ட தவறுகளை மூடிமறைக்கும் வகையில், அமெரிக்க அரசியல்வாதிகள் அறிவியலுக்குப் புறம்பாகச் செயல்படுவதோடு, தொற்று நோய் தடுப்புக்கான சிறந்த நேரத்தையும் இழத்துள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.