
சரோசாய்: அரசுப்படைகளுடன் நடந்த மோதலில், ஆப்கனில் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகணத்தில் உள்ள சரோசாய் நகரில் வியாழன் இரவன்று, தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது, இதில் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
அதேசமயம் அரசுப்படை வீரர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.