சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ‘திடீர் ’உத்தரவு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங்
சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங்கின் பரிந்துரையின்படி அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து செவ்வாயன்று அதிபர் ஹலிமா யாகோப் ‘திடீர் ’உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்காரணமாக விரைவில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான தேதி ஜூன் 30-ஆக இருக்கலாம் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ‘தி ஸ்ட்ரைட் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.    

முன்னதாக தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ ஸீன் லூங் கூறியதாவது:

சிங்கப்பூரில் கரோனா வைரசின் தாக்கத்தினால் ஏற்பட்ட சூழல் தற்போது கட்டுக்குள் இருப்பதால், பொதுத்தேர்தலை நடத்தி விடலாம் என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய அரசுக்கு ஆட்சி செய்வதற்கு முழுதாக ஐந்து ஆண்டுகள் கிடைக்கும்.

புதிதாகத் தேர்வு செய்யபப்டும் அரசானது கரோனா பாதிப்பைக் கையாளுதல்,  நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேசிய செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதுதொடர்பாக முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருக்கும்.

வரும் அரசானது  வெறுமனே அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தொலைநோக்குப் பார்வையுடன் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com