பெய்ஜிங்கின் செயல்முறை நோய்த் தடுப்புக்கான திசைக்காட்டியாக மாறக்கூடும்

பெய்ஜிங்கில் புதிதாக கரோனா தொற்று நோயாளி கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, பல தரப்புகள் பெய்ஜிங் மீது கவனம் செலுத்தி வருகின்றன.
corona test
corona test

ஜூன் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் புதிதாக கரோனா தொற்று நோயாளி கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, பல தரப்புகள் பெய்ஜிங் மீது கவனம் செலுத்தி வருகின்றன.

நியூயார்க் டைம்ஸ் நாளேடு 19ஆம் நாள் பெய்ஜிங்கின் நோய்த்தடுப்பு வழிமுறை பற்றி தகவல் வெளியிட்டதோடு, பெய்ஜிங் அரசு உடனே செயல்பட்டு, நோயாளிகளுடன் தொடர்புடைய சின் ஃபா டி எனும் வேளாண் பொருட்கள் விற்பனை சந்தையை காலதாமதமின்றி மூடியது, அச்சந்தைக்கு அருகிலுள்ள 40க்கும் அதிகமான குடியிருப்புக் கட்டிடங்கள் மீது முடக்க நடவடிக்கை மேற்கொண்டது, நோயாளிகள் அதிகமாக உள்ள ஃபெங்தாய் பிரதேசத்தில் போர்க் கால இயங்குமுறையை உடனே தொடங்கியது ஆகியனவற்றை அறிமுகம் செய்தது.

ஆனால் பெய்ஜிங்கிலுள்ள பல இதர குடியிருப்புப் பகுதிகளில் கடைகள், பேரங்காடிகள், உணவகங்கள், முடித்திருத்தகங்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்குகின்றன. சாலைகளில் வாகனங்களும் முன்பைப் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இது குறித்து நியூயாக் டைம்ஸ் கூறுகையில்,

கடந்த சில மாதங்களுக்கு முந்தைய நோய் தொற்று தடுப்புப் பணியிலிருந்து சீன அரசு அதிக அனுபவங்களைப் பெற்றுள்ளதன் காரணமாக பெய்ஜிங்கில் இத்தகைய காட்சிகளைக் காண முடிகிறது என்று தெரிவித்துள்ளது. அதோடு,  பெய்ஜிங்கின் தற்போதைய நோய்த் தடுப்பு முறை வெற்றி பெற்றால், அது, எதிர்காலத்தில் சீனாவின் நோய்த்தடுப்புக்கான திசைக்காட்டியாக மாறக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி, சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கொள்ளை நோயியல் நிபுணர் வூ சுன்யோ பேசுகையில்,

பெய்ஜிங்கில் காணப்படும் நோய் தொற்று அடிப்படையில் கட்டுக்குள் உள்ளது என்று கூறினார். இருப்பினும், வைரஸ் பரவலை ஆராயும் வகையில் உள்ளூர் அரசு மூடப்பட்ட சந்தைகளில் புலனாய்வு மேற்கொண்டு வருவதோடு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

குறிப்பிட்ட மக்களிடையில், குறிப்பிட்ட பகுதிகளில் மற்றும் குறிப்பிட்ட துறையினர்களிடையில் நியூக்லிக் அமில சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பெய்ஜிங் அரசு விதித்துள்ளது. இதனால், மருத்துவ மனைகளின் நுழைவாயில்கள், விளையாட்டரங்குகள், குடியிருப்பு பகுதிகளின் மையங்கள் ஆகியவற்றில் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு வாரத்துக்குள் 11 லட்சம் மக்களிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் கருத்து தெரிவிக்கையில், நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் மீது சோதனை மேற்கொள்வது என்பது சீன அரசு வெற்றிகரமாக நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திறவுகோலாகும் என்று பாராட்டு தெரிவித்துள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேடு வெளியிட்ட செய்தியில், சில ஆசிய நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் போக்கில் கரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றன. பெய்ஜிங்கின் நோய்த்தடுப்பு வழிமுறை அவற்றுக்கு அகத்தூண்டலாக அமையும். சவால்கள் நிலவிய போதிலும், பொது மக்களின் விழிப்புணர்வுடனும், சுகாதார அமைப்பு முறையின் ஆயத்தப் பணிகளுடனும், பெய்ஜிங்கில் கட்டுப்படுத்த முடியாத அளவில் நோய்த்தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com