கொவைட்-19 பற்றி உலகின் சந்தேகங்களுக்கு அமெரிக்கா பதில் அளிக்க வேண்டும்

அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் அண்மையில் கொவைட்-19 வைரஸை சீன வைரஸ் என பல முறை குறிப்பிட்டிருந்தனர்.
கொவைட்-19 பற்றி உலகின் சந்தேகங்களுக்கு அமெரிக்கா பதில் அளிக்க வேண்டும்

அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் அண்மையில் கொவைட்-19 வைரஸை சீன வைரஸ் என பல முறை குறிப்பிட்டிருந்தனர்.

இக்கூற்றுகள் குறித்து, மேலை நாடுகளின் ஊடகங்கள் கூறுகையில், இவை இனவெறி, பகைமை, பலிகடாவாக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளன. 

கொவைட்-19 நோய் பற்றி 3 சந்தேகங்கள் உள்ளன. பொது மக்கள் மற்றும் உலகிற்கு அமெரிக்கா தெளிவான பதில்களை அளிக்க வேண்டும். முதலாவதாக, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மதிப்பீட்டின்படி, கடந்த ஆண்டில் செப்டம்பர் பரவத் தொடங்கிய காய்ச்சலில் அமெரிக்காவில் 3 கோடிக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தைத் தாண்டியது. இவர்களில் எத்தனை பேர் கொவைட்-19 பாதிப்பால் உயிரிழந்தனர். 

இரண்டாவதாக, 2019ஆம் ஆண்டின் ஜுலை மேரிலாந்த் மாநிலத்தில் அமைந்துள்ள தெட்ரிக் கோட்டை உயிர் மற்றும் வேதியியல் ஆயுதத் தளம் ஏன் மூடப்பட்டது. இத்தளம், அமெரிக்க ராணுவத்தின் மிக பெரிய உயிர் மற்றும் வேதியியல் ஆய்வு மையமாகும். 

மூன்றாவதாக, இவ்வாண்டின் பிப்ரவரியில் அமெரிக்காவில் பரவிய நோய்க்குத் தடுப்புப் பணியில் டிர்ம்ப அரசு அலட்சியம் காட்டிய போது, செனட் உளவு ஆணையத்தின் அதிகாரிகள் பலர், ஏன் சில பத்து இலட்சம் டாலர் மதிப்புள்ள பங்கு பத்திரங்களை அவசரமாக விற்றனர்? 

நேரத்தையும் உயிரையும் திரும்பப் பெற முடியாது. அமெரிக்க அரசியல்வாதிகள் இந்த உண்மையை சீக்கிரம் புரிந்து கொள்ளாவிடில், இதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com