

கரோனா தொற்றால் ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதில், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அலிகாண்டே மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஸ்பெயினில் தற்போது கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 47,610 ஆக உள்ளது. ஒரே நாளில் 5,552 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலமாக கரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது ஸ்பெயின். சீனாவில் கரோனாவுக்கு 3,281 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.