ஸ்பெயினில் 7 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டி 7,340 ஆக உள்ளது.
பார்சிலோனாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமை ஊக்குவித்த மக்கள்
பார்சிலோனாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமை ஊக்குவித்த மக்கள்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டி 7,340 ஆக உள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான போராடி வருகின்றன. இந்த நோய்த் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருத்துகள் கண்டுபிடிக்கப்படாததால் தனிமைப்படுத்துவதையும், தொடர் பரிசோதனைகளையுமே உகந்த மருந்தாக உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன. இந்த நோய்த் தொற்றால் குணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், பாதித்தோர் மற்றும் பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

ஸ்பெயின் நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்து 7,340 ஆக உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,42,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,490 பேர் பலியாகியுள்ளனர். 

அதிகம் பலியானோரின் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. அங்கு இதுவரை 10,779 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டில் பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி 97,689 ஆக உள்ளது.

உலகளவில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை: 7,35,210

உலகளவில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை: 34,808

உலகளவில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,56,137

இந்தியாவில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை: 1,071

இந்தியாவில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை: 29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com