பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,315 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 21,501 ஆனது

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,315 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 21,501 ஆக அதிகரித்துள்ளது.
pakistan101649
pakistan101649
Updated on
1 min read

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,315 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 21,501 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,315 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,501 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று உயிரிழப்பு 486 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 5,782 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று மட்டும் 9,857 பரிசோதனைகள் உள்பட இதுவரை 2,22,404 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com