

அமெரிக்காவில் கொவைட்-19 நோய் தொற்று நிலைமை மோசமாகி வருவதுடன், டிரம்ப் அரசின் மீதான உள்நாட்டுக் குற்றட்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறியாத டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொள்கையை சரிப்படுத்தாமல், சொந்த பொறுப்புகளைத் தட்டிக்கழித்து, மற்றவர்களின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அண்மையில் அமெரிக்காவின் பஸ்ஃபீட்(BuzzFeed) எனும் செய்தி இணையதளத்தில், “புதிய ரக கரோனா வைரஸ் வூஹானிலுள்ள ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததற்கான சான்றுகளை அறிவியலாளர்கள் கண்டறியவில்லை. டிரம்பின் ஆதரவாளர்கள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்” என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. புதிய ரக கரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்பது சதித் திட்டக் கருத்தாகும். இத்தகைய கருத்தை பரப்பி வரும் நபர்கள் அரசியல் நலனுக்காக மட்டுமே செயல்படுகின்றனர் என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
கொலாம்பிய பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரி மற்றும் நோய்த்தடுப்பியல் துறையின் பேராசிரியர் வின்சென்ட் ராகனியேல்லொ(Vincent Racaniello) கூறுகையில், வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து வருவாக்கப்பட்டது என்ற கருத்து அரசியல் அடிப்படையிலானது தான் என்று தெரிவித்தார். மேலும், ஆய்வுக்கூடத்தின் கசிவுக்கு வாய்ப்பில்லை. வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்தால் ஆய்வாளர்கள் மிக முன்னதாகவே அதனால் பாதிக்கப்படிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதோடு, இவ்வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்தையும் அவர் மறுத்துரைத்தார். இத்தகைய வைரஸை வடிவமைக்க யாராலும் முடியாது என்பது அவரது கருத்து.
வைரஸ் பற்றிய சதித்திட்டக் கருத்து வெள்ளை மாளிக்கையால் விமர்சிக்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தொற்று நோயியல் துறை நிபுணர் ஃபாவ்சி தொடர்புடைய கேள்விக்குப் பதிலளிக்கையில், இவ்வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றியிருப்பது என்பதையும் அது செயற்கையானது அல்ல என்பதையும் வைரஸ் மரபணுத் தொகுதி பற்றிய ஆய்வு தெளிவாக நிரூபித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் க்ரிப்ஸ் ஆய்வுக் கழகத்தின் டாக்டர் க்ளிஸ்தியன் ஆண்டெர்சென்(Kristian Andersen) நோய்த்தடுப்பு மற்றும் நுண்ணுயிரி துறையில் ஈடுபட்டு வருகிறார். நேட்சர் சயின்ஸ்(Nature Science) இதழில் அவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில், புதிய ரக கரோனா வைரஸை மனிதருக்குத் தொற்றியிருக்கும் இதர 6 வகை கரோனா வைரஸ்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தார். அவரது ஆய்வு, புதிய ரக கரோனா வைரஸ் செயற்கை அல்ல என்ற முடிவுக்கு வந்தது.
வைரஸ் தோற்றத்தை அறிவியலாளர்கள் இப்போது வரை உறுதிப்படுத்த முடியவில்லை என்றபோதிலும், அது தொடர்பான வதந்திகள் பெருமளவில் வேகமாக பரவி வருவதற்கான ஒரேயொரு காரணம் டிரம்ப் என்பதை உறுதி செய்ய முடியும் என்று பஸ்ஃபீட் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.