பஞ்சென் லாமாவை விடுவிக்கஉலகம் முழுவதும் எழுந்த குரல்

பஞ்சென் லாமாவை விடுவிக்க வேண்டுமென உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. ஜெனீவாவில் உள்ள திபெத்திய அமைப்பு தலைமையில்
திபெத்தில் உள்ள பஞ்சென் லாமாவின் மடாலயம்.
திபெத்தில் உள்ள பஞ்சென் லாமாவின் மடாலயம்.
Published on
Updated on
1 min read


பஞ்சென் லாமாவை விடுவிக்க வேண்டுமென உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. ஜெனீவாவில் உள்ள திபெத்திய அமைப்பு தலைமையில் ஐ.நா. சபையில், பஞ்சென் லாமாவை விவகாரத்தில் சீனாவை வலியுறுத்தக் கோரி ஒரு மனு அளிக்கப்பட்டது.

அதில், அமெரிக்கா, ஆஸ்திரியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த 159 அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

இதில், ஐரோப்பிய நாடான ஸ்லோவேகியாவிலிருந்து எழுந்துள்ள குரல் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் நாடாளுமன்ற துணைத் தலைவர் கபோர் கிரென்டல் தலைமையில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், "திபெத்தியர்களின் உரிமைகளை 6 தசாப்தங்களுக்கும் மேலாக சீனா நசுக்கி வருகிறது. அத்துடன் உய்கர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் சீனா அடக்குமுறையில் ஈடுபட்டிருப்பதை அனைவரும் அறிவர். படைபலமும் வன்முறையும் அமைதியையும் நிலைத்தன்மையையும் தராது என்பதை சீனா உணர வேண்டும். திபெத் விவகாரம் குறித்து தீர்வுகாண மதத் தலைவர் தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பஞ்சென் லாமாவையும் திபெத்திய அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com