மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வரும் சீனா

சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின்
மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வரும் சீனா

சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2020ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர்களில், கொவைட்-19 நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகிய அம்சங்களில் மிக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத் தொடரின் விவாதக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆலோசனை வழங்கி பேசுகையில்

மக்களை முதன்மை இடத்தில் வைக்கும் வளர்ச்சிக் கொள்கையை பல்வகை வகைகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். நெருக்கமாக மக்களைச் சார்ந்திருந்து, இடைவிடமால் மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொவைட்-19 தொற்று நோய் ஏற்பட்ட பிறகு மக்களின் உடல் நலம் மற்றும் உயிர் பாதுகாப்பை முதலிடத்தில் வைத்து முழு மூச்சுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உயிரை மீட்பது என்பது மக்களே முதன்மை என்ற கொள்கையைச் செயல்படுத்துவதாகும்.

தொற்று நோய் தடுப்பைத் தவிர,  பொருளாதார வளர்ச்சியிலும் இந்த கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாண்டுக்குள், வறுமை ஒழிப்பு மற்றும் குறிப்பிட்ட வசதியான சமூக உருவாக்கம் ஆகிய இரண்டு இலக்குகளை நிறைவேற்ற சீனா திட்டமிட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கையில் சீன அரசுத் தலைவர் மிகுந்த கவனம் செலுத்துகின்றார். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடரின் பொருளாதாரத் துறைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் பேசுகையில்,  மக்கள் குறிப்பாக விவசாயிகளுக்கு உதவி அளிப்பது எமது குறிக்கோள் ஆகும் என்று குறிப்பிட்டார்.

பொருளாதாரச் சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் வகையில், அதன் இறுதி நோக்கம்,  மக்கள் அருமையான வாழ்க்கையை வாழ்வதவதாகும். தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திலும் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவதிலும், இந்த குறிக்கோள் தெளிவாக தெரிந்துள்ளது. 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சொல்வதைப் போல,  கட்சியின் தலைமையில் மக்களுடன் இணைந்து மேற்கொண்டு வரும் ஆக்கப்பணிகள் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை,  மக்கள் நல்ல வாழ்க்கையை வாழ்வதாக அமையும்.  எவ்வளவு அறைகூவல் மற்றும் அழுத்தத்தை எதிர்கொண்டாலும், இந்த இலக்கு எப்போதும் மாறப் போவதில்லை.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com