சீனாவின் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காக்க ஹாங்காங்கின் சட்டம்

தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்காக ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்ட அமைப்புமுறை மற்றும் அதன் அமலாக்க..
சீனாவின் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காக்க ஹாங்காங்கின் சட்டம்

தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்காக ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்ட அமைப்புமுறை மற்றும் அதன் அமலாக்க முறைமையை மேம்படுத்துவது பற்றிய தீர்மானம், சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில், மே 28-ஆம் நாள் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் வெளியிடப்பட்ட பின் அமலுக்கு வரும்.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்கள், ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறை என்ற கோட்பாடு, ஹாங்காங்கின் நீண்டகால செழுமை மற்றும் நிதானம், ஹாங்காங் மக்களின் சட்டப்பூர்வமான நலன் ஆகியவற்றைப் பேணிக்காக்கும் விதமாக, சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்புச் சட்டம், சீன மக்கள் குடியிரசின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படை சட்டம் ஆகியவற்றுக்கு இணங்க, தேசிய மக்கள் பேரவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் விவகாரங்களில் வெளிநாடுகள் எந்த விதத்திலும் தலையிடுவதை சீனா உறுதியாக எதிர்த்து, இதற்குப் பதிலடி கொடுக்கும் என்று இத்தீர்வானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com