ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வியன்னாவில் தீவிரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

வியன்னாவில் தீவிரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

Updated On :3 நவம்பர் 2020, 7:53 am

புது தில்லி: வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களால், அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், ஆஸ்திரியாவுக்கு இந்தியா துணை நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்" என பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.

6 வெவ்வேறு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள், உணவகங்களைக் குறி வைத்து நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி உள்பட 4 பேர் பலியாகினர்.

கரோனா காரணமாக ஒரு மாத காலத்துக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.