பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா குறித்து கரோனாவிற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளது.
இந்நிலையில் டான் செய்திக்கு பாகிஸ்தான் மருத்துவ சங்கம் (பி.எம்.ஏ) பொதுச்செயலாளர் கைசர் சஜ்ஜாத் அளித்த பேட்டியில் கூறுகையில்,
கரோனா தொற்று தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இரண்டாம் அலை ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தாக இருக்கும். நிலைமையை சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகள் போட வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, ஆனால் யாரும் பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பல கூட்டங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன, அதில் அவர்கள் முகக்கவசம் அணியாமல் கைகுலுக்கி சமூக இடைவெளி இல்லாமல் உள்ளார்கள். இது கரோனா விதிமுறைகளை மீறும் செயல் என தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3,36,260 மற்றும் பலியின் எண்ணிக்கை 6,849 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


