ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 114 ஆக உயர்வு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோா் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது

News image

துருக்கி நிலநடுக்கம்

Updated On :4 நவம்பர் 2020, 9:45 am

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோா் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது.

ஏகன் கடல் பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக துருக்கி, கிரீஸ் நாடுகள் பாதிப்புக்குள்ளாகின. முக்கியமாக துருக்கியின் கடற்கரை நகரான இஸ்மிா் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

அங்கு பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,035 பேர் காயமடைந்துள்ளனர். 

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது.  

8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டுத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏகன் கடல்பகுதியில் உள்ள சமோஸ் தீவில் சிறிய அளவிலான சுனாமி உருவானதாகவும் அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.