உலக அளவில் கரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் கரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது
Published on
Updated on
1 min read



வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 216  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பத்து மாதங்களை கடந்தும் அதன் வீரியமும் வேகமும் குறையாமல் இருந்து வருகிறது. 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 4 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,49,80,752 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

உலக முழுவதும் இதுவரை 12,39,410 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,27,97,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 77,64,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
    
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 99,19,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,40,953 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1.09 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நோய்த்தொற்று பாதிப்பில்  இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களில் உள்ளது. இந்தியாவில் 84,11,034 பேரும், பிரேசிலில் 56,14,258 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு பட்டியலில்  1,61,779 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 1,25,029 உயிரிழப்புகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு மோசமான நாடுகளின் பட்டியலில் 17,12,858 பாதிப்பு மற்றும் 29,509 உயிரிழப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com