அமெரிக்காவில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் ஒன்றில் இருக்கும் பென்குயின் பறவைக்கு வசிப்பிடத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவரும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
கலிபோர்னியாவில் மான்டெரி என்ற இடத்தில் இருக்கிறது, மான்டெரி கடல்வாழ் உயிரினக் காட்சியகம்.
இங்கே இருக்கும் ரே என்று பெயரிடப்பட்டுள்ள ஆறு வயதுள்ள ஆப்ரிக்க பென்குயின், எப்போதுமே காட்சியகப் பணியாளர்களைப் பின்தொடர்ந்து வெளியே வர முயற்சி செய்யும்.
தற்போது கரோனா பரவல் காரணமாகக் காட்சியகம் மூடப்பட்டிருப்பதால் காட்சியகத்துக்குள் தாராளமாக நடமாடவும் மீன்கள், பிற உயிரினங்களைப் பார்க்கவும் இந்த பென்குயினை நிர்வாகத்தினர் அனுமதித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டில் பொரிக்கப்பட்ட இந்த பென்குயினுக்கு கண்களில் காட்ராக்ட் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 2014-ல் அறுவைச் சிகிச்சை மூலம் காட்ராக்ட் அகற்றப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கடலோரப் பகுதிகளில் இருக்கும் இந்த வகை ஆப்பிரிக்க பென்குயின்கள், அளவில் மிகவும் சிறியவை என்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.