
உலக அளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.77 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளிலேயே அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கரோனா நோய்த் தொற்று பதிவாகி வருகின்றது.
உலகளவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,77,55,013 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று காரணமாக 10,81,508 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் நோய்த் தொற்று பாதித்து இதுவரை 2,83,61,454 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா காரணமாக 8,31,2,051 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 68,735 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.