வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சத்து 43 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 214 நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சத்து 43 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 2,91,23,542 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8,523,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 70,431 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 10,96,876 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 63,80,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 81,50,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,21,843 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது. இந்தியாவில் 73,05,070 பேரும், பிரேசிலில் 51,41,498 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் (13,40,409), அர்ஜென்டினா (931,967), கொலம்பியா (930,159), ஸ்பெயின் (908,056), பெரு (853,974), மெக்சிகோ (830,502), பிரான்ஸ் (820,376) ), தென்னாப்பிரிக்கா (696,414), இங்கிலாந்து (657,459), ஈரான் (513,219), சிலி (485,372), ஈராக் (413,215), பங்களாதேஷ் (382,959), இத்தாலி (372,799) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 1,51,779 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 1,11,311 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும், 23,205 உயிரிழப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.
பலி: மெக்ஸிகோ (84,891), இங்கிலாந்து (43,245), இத்தாலி (36,289), பெரு (33,419), ஸ்பெயின் (33,413), பிரான்ஸ் (33,058), ஈரான் (29,349), கொலம்பியா (28,306), அர்ஜென்டினா (24,921), ரஷ்யா (23,069), தென்னாப்பிரிக்கா (18,151), சிலி (13,415), ஈக்வடார் (12,264), இந்தோனேசியா (12,156), பெல்ஜியம் (10,244) மற்றும் ஈராக் (10,021) பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


