

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சமீபத்தில் மேலும் ஒன்பது மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இந்தோனேசியாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 136 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என்று இந்தோனேசியன் மருத்துவ சங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சுகாதார சேவை புரிபவர்களுக்கு இது ஒரு நெருக்கடியான நிலைமை. இறந்த மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, மேலும் கவலை அளிக்கிறது என்று மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் அரி குசுமா கூறியுள்ளார்.
இறந்த பெரும்பாலான மருத்துவர்கள் கிழக்கு ஜாவா (32 மருத்துவர்கள்) , வட சுமத்ரா (23), ஜகார்த்தா (19), மேற்கு ஜாவா(12) ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.