ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு 13,754: பலி 286

ரஷியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 13,754 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

News image

Russia records 13,754 COVID-19 cases in past 24 hours

Updated On :15 அக்டோபர் 2020, 8:08 am

ரஷியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 13,754 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 13,754 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, மொத்த பாதிப்பு 13,54,163 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 286 பேர் உள்பட இதுவரை 23,491 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 10,48,097 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேலும், இன்று பாதித்தோரில் தலைநகர் மாஸ்கோவில் அதிகபட்சமாக 3,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலை தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.