அமெரிக்காவில் ஒரேநாளில் 60 ஆயிரம் பேருக்கு கரோனா

அமெரிக்காவில் ஒரேநாளில் 60,315 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 82,72,427 பேர் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
US reports over 60k new Covid-19 cases
US reports over 60k new Covid-19 cases

அமெரிக்காவில் ஒரேநாளில் 60,315 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 82,72,427 பேர் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 2,20,992 ஆக அதிகரித்துள்ளது. 

ஒற்றை நாள் கரோனா வைரஸ் வழக்குகளின் அதிகரிப்பு கோடையில் இருந்ததை விட மிக அதிகமாக பதிவாகியுள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுவரை 55,46,675 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 27,48,586 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com