
கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக தேசிய கலை மற்றும் அறிவியல் அகாதமி தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கியமான விருதுகளில் ஒன்று கிராமி விருதுகள். 1951 முதல் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு, 63 ஆவது கிராமி விருதுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு நவம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பசிபிக் நேரப்படி காலை 9 மணிக்கு லைவ் ஸ்ட்ரீமில், தலைமை நிர்வாக அதிகாரி ஹார்வி மேசன் ஜூனியர், பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலை அறிவிப்பார் என்றும் கிராமி டாட் காமில் இந்த நேரலையைக் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ் தொலைக்காட்சி நெட்வொர்க்கில், ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை அன்று விருது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.