
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 497 பேர் உயிரிழந்ததை அடுத்து நாட்டில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1,55,900 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் பல்வேறு நாடுகள் தவித்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா இறப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பிரேசிலில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் புதிதாக 24,858 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5,32,3,630 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதித்து 3,91,375 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,78,5,297 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.