கோப்புப்படம்
கோப்புப்படம்

பிளாஸ்டிக் கழிவுகள்: அமெரிக்கா முதலிடம்

உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகரிக்கும் மாசுபாடு புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு சூழலுக்கும், பிற உயிர்களுக்கும் சிக்கல் தரும் ஒன்றாக மாறிவருகிறது. ஆழமான பெருங்கடல்கள் முதல் ஆர்க்டிக் பனி வரை பிளாஸ்டிக் கழிவுகள் முழு உலகையும் மாசுபடுத்தியுள்ளன. மேலும் இது வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவித்து வருகின்றன.

இந்நிலையில் உலக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பிளாஸ்டிக் கழிவுகளின் ஆபத்தை விவரிக்கின்றன.

"அமெரிக்கா உலக மக்கள்தொகையில் 4% ஆகும், ஆனால் அதன் பிளாஸ்டிக் கழிவுகளில் 17% உற்பத்தி செய்கிறது." என்று ஓஷன் கன்சர்வேன்சி அமைப்பைச் சேர்ந்தவரும், ஆய்வில் பங்கெடுத்தவருமான நிக் மல்லோஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிக நுகர்வு நிலைகளின் விளைவாக இத்தகைய நிலையை அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஆய்வு "உலகளாவிய பிளாஸ்டிக் மாசு நெருக்கடியை எதிர்கொள்வதில் அமெரிக்கா மிகப் பெரிய பங்கை வகிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் லாவ் தலைமையிலான ஒரு ஆய்வில்,  2040ஆம் ஆண்டுக்குள் உலகில் 700 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றுநோய் காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

217 நாடுகளில் வெளியான பிளாஸ்டிக் கழிவு குறித்த தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு 105 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன்( 99 கிலோ), தென்கொரியா (88 கிலோ) ஆகிய நாடுகள் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com