இந்தோனேசியாவில் புதிதாக 3,444 பேருக்கு கரோனா: 85 பேர் பலி

இந்தோனேசியாவில் புதிதாக 3,444 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 85 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
கரோனா நோய்த்தொற்று பரிசோதனை
கரோனா நோய்த்தொற்று பரிசோதனை

இந்தோனேசியாவில் புதிதாக 3,444 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 85 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தோனேசிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 3,444 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,109-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் புதிதாக 2,174 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 138,575-ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இந்தோனேசியாவின் 34 மாகாணங்களிலும் கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஜகர்தா பகுதியில் 1,176 பேரும், கிழக்கு ஜாவா பகுதியில் 303 பேரும், மேற்கு சுமத்ராவில் 244 பேரும், மத்திய ஜாவா பகுதியில் 233 பேரும், தெற்கு சுலவேசி பகுதியில் 209 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com