
கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 786 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 6,159 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், புதிதாக 3,634 பேர் பாதிக்கப்பட்டிருப்பது அறியவந்ததைத் தொடர்ந்து, நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 55,242 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் கடந்த 5 நாள்களாக பலியாவோரின் எண்ணிக்கை:
- வெள்ளிக்கிழமை - 684
- சனிக்கிழமை - 708
- ஞாயிற்றுக்கிழமை - 621
- திங்கள்கிழமை - 439
- செவ்வாய்கிழமை - 786 (இன்று)