சீனாவில் இரண்டாவது கரோனா அலை? 1000 பேருக்கு கரோனா பாதிப்பு

கரோனாவின் தோற்றுவாயான சீனாவில், கடந்த சில தினங்களாக அந்த நோய்த்தொற்றின் தாக்கம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவின் தோற்றுவாயான சீனாவில், கடந்த சில தினங்களாக அந்த நோய்த்தொற்றின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்ட நிலையில், புதிதாக 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 61 பேர் வெளிநாடுளில் இருந்து வந்தவா்கள்.

கரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில் இரண்டு மாதத்துக்கும் மேல் இருந்த ஊரடங்கு புதன்கிழமை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சீனாவில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதில்லாமல், வியாழக்கிழமை நிலவரப்படி சீனாவில் கரோனா பாதித்த இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, சீனாவில் புதிதாக 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,104 ஆக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

புதன்கிழமையும் 56 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 28 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவைட்-19 எனப்படும் கரோனா நோய்த்தொற்று முதன் முதலில் சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் உள்ள மீன் சந்தையிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் பரவியது.

இந்த நோய்த்தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவிட்டனா். சீனாவில் இதுவரை 81 ஆயிரம் பேரை கரோனா நோய்த்தொற்று தாக்கியுள்ளது. 

இதனிடையே, நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தரைவழி, வான்வழி போக்குவரத்து நிறுத்தம், அனைத்து அலுவலகங்களும் மூடல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. இதன் காரணமாக, கடந்த வாரத்தில் சில தினங்கள் கரோனா நோய்த்தொற்று புதிதாக பரவுவது முற்றிலுமாக இல்லாமல் காணப்பட்டது.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் வெளிநாடுகளில் வசிக்கும் சீன நாட்டினா், அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளனா். பலரை சிறப்பு விமானம் மூலம் அரசு அழைத்து வந்துள்ளது. சீனாவில் வெளிநாட்டினா் உள்ளே நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வரும் சீன நாட்டினருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுதவிர, எந்த அறிகுறியும் காணப்படாமல், பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 900 போ் உள்ளனா். இவா்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள். இவா்கள் மூலமாக மற்றவா்களுக்கு நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால், நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து, இரண்டாம் கட்ட பாதிப்பை சீனா சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com