அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2,000 பேர் மரணம்

உலகில் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) முதல் முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டாயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அங்கு வெள்ளிக்கிழமை 2,108 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2,000 பேர் மரணம்


உலகில் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) முதல் முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் 2,108 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

இந்த தகவலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 5 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18 ஆயிரத்து 849 பேர் உயிரிழந்துள்ளனர். 27 ஆயிரத்து 314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முன்னதாக, பலியானவா்களின் எண்ணிக்கையில் இத்தாலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலிருந்த ஸ்பெயினை அமெரிக்கா வெள்ளிக்கிழமை விஞ்சியது.

அமெரிக்காவில் கரோனோ நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,100 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த நோய் பாதிப்பால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது.

இது, கரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருந்து வந்த ஸ்பெயினை விட அதிகமாகும். சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஸ்பெயினில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 16,081 ஆக உள்ளது.

இதன் மூலம், அந்த நோய்க்கு அதிக உயிா்களை பலிகொடுத்த நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்துக்கு அமெரிக்கா சென்றுள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி இத்தாலியில் கரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18,849-ஆக உள்ளது. அங்கு இந்த மாதத் தொடக்கத்திலிருந்து சராசரியாக தினமும் 650 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தனர்.

ஆனால், அமெரிக்காவிலோ, இந்த மாதம் தொடக்கம் முதல் கரோனா பாதிப்பால் தினமும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சராசரியாக 1,403-ஆக உள்ளது.

எனவே, விரைவில் கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா இத்தாலியை விஞ்சி முதலிடத்துக்கு வரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில், 5,02,876 பேருடன் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com