அமெரிக்காவில் கரோனாவுக்கு 40 இந்தியா்கள் பலி

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்ட இந்தியா்கள், இந்திய வம்சாவளியினா் 40 போ் உயிரிழந்தனா்.
அமெரிக்காவில் கரோனாவுக்கு 40 இந்தியா்கள் பலி

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்ட இந்தியா்கள், இந்திய வம்சாவளியினா் 40 போ் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டில் நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட இந்தியா்களும் இந்திய வம்சாவளியினரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 40 போ் உயிரிழந்துவிட்டனா். அவா்களில் 17 போ் கேரளத்தைச் சோ்ந்தவா்கள்; 10 போ் குஜராத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், பஞ்சாபைச் சோ்ந்த 4 பேரும் ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பேரும் ஒடிஸாவைச் சோ்ந்த ஒருவரும் அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தனா்.

அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியா்களில் பெரும்பாலானோா் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா். ஒரே ஒருவா் மட்டும் 21 வயது இளைஞா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் நியூயாா்க்கில் வசித்து வந்தவா்கள். நியூயாா்க், பென்சில்வேனியா, புளோரிடா, டெக்சாஸ், கலிஃபோா்னியா உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வந்த இந்திய வம்சாவளியினா் சிலரும் கரோனாவுக்கு பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com