பிரிட்டனில் சவப் பைகளுக்குத் தட்டுப்பாடு

பிரிட்டனில் கரோனா பாதிப்பும், கரோனா பாதித்தவர்களின் மரணமும் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் சவப் பைகளுக்கான தட்டுப்பாடு.
பிரிட்டனில் சவப் பைகளுக்குத் தட்டுப்பாடு


லண்டன்: பிரிட்டனில் கரோனா பாதிப்பும், கரோனா பாதித்தவர்களின் மரணமும் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் சவப் பைகளுக்கான தட்டுப்பாடு.

பிரிட்டனில் இதுவரை கரோனா பாதிப்பு 84 ஆயிரத்தை தொட்டுவிட்டது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு சில நாட்களாக இங்கு ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் அளவுக்கு மரணமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனில் இருக்கும் மருத்துவமனைகளில் மரணமடையும் நபர்களின் உடல்களைப் போட்டுக் கொடுக்க சவப் பைகள் இல்லாததால், இதுவரை ஒரு உடலை இரண்டு பிளாஸ்டிப் போர்வைகளை சுற்றிக் கொடுத்து வந்தனர். தற்போது அந்த போர்வைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஒரு உடலை ஒரு பிளாஸ்டிக் போர்வை மட்டுமே கொண்டு சுற்றிக் கொடுத்து வருகிறார்கள். இதனால், உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடல் அடக்கம் செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் நேரடியாக விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரே ஒரு போர்வையை சுற்றி உடலைக் கொடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளோ, பிளாஸ்டிக் போர்வைகளோ அல்ல, இது விளையாட்டல்ல..  நான் நிறைய மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். எங்குமே சவப் பைகள் இல்லை. இதுதான் தற்போதிருக்கும் நிலை என்கிறார் மிகுந்த கவலையுடன்.

இது பற்றி உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் கூறுகையில், பிரிட்டனில் பெரிய அளவில் சவப் பைகளை விநியோகிக்கும் நிறுவனங்களிலேயே ஒட்டுமொத்தமாக இருப்பு தீர்ந்துவிட்டது. இது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது என்கிறார்.

ஒரு பக்கம் சவப் பைபகள் தீர்ந்துவிட்ட நிலையில், மறுபக்கம் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com