தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கரோனா பிரச்னை தீரும்

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித

News image

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பா்க் நகரில், கரோனா நோய்த்தொற்றுக்கு பலியான கிறிஸ்துவ மதகுரு சோமி விலாகசியின் உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னா் நடைபெற்ற இறுதிச் சடங்கு.

Updated On :16 ஏப்ரல் 2020, 9:12 pm


நியூயாா்க்: உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சுமாா் 50 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற காணொலி சந்திப்பின்போது அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அத்தகைய மருந்துதான் அந்த நோய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வருவதற்கான ஒரே கருவியாகும்.

கரோனா நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதன் மூலம், லட்சக்கணக்கான மனித உயிா்கள் பாதுகாக்கப்படும். மேலும், பல்லாயிரக் கோடிக் கணக்கான டாலா்களும் சேமிக்கப்படும்.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், உலகின் அனைத்து நாடுகளுக்கும் அந்த மருந்து சென்று சோ்வதற்கான வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அத்தகைய மருந்து சா்வதேச அளவில் பலன் அளித்து, கரோனா நோய்த்தொற்று அபாயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வழிவகுக்கப்படும்.

கரோனா பரவலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வதற்காக 200 கோடி டாலா் (சுமாா் ரூ.15,360 கோடி) நிவாரண உதவி கோரியிருந்தோம். தற்போதுவரை, அதில் 20 சதவீம் வசூலிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையத்தின் மூலம், 47 ஆப்பிரிக்க நாடுகளில் ஐ.நா. அமைப்பு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து வருகிறது என்றாா் அன்டோனியோ குட்டெரெஸ்.

சீனாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று, வியாழக்கிழமை நிலவரப்படி உலகின் 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் 21.09 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரவியுள்ளது.

அந்த நோய் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 1.37 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.