அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்குத் தற்காலிகமாக தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 7,92,759 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,514 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. எனவே, அமெரிக்காவில் தீவிரமாகப் பரவி வரும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுக்காகவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


