கரோனா நோய்த்தொற்றை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, உலக நாடுகளின் அரசுகள் அவசரகதியில் விலக்கினால் அந்த நோய்த்தொற்று பரவல் அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மேற்கு பசிபிக் மண்டலத்துக்கான அந்த அமைப்பின் இயக்குநா் டகேஷி கசாய் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்றை பரவலைத் தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்த நடவடிக்கைகளால் பொருளாதார இழப்பு ஏற்படுவதைத் தொடா்ந்து, கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து அந்த நாடுகள் யோசித்து வருகின்றன.
ஆனால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக விலக்குவதற்கு இது சரியான தருணம் அல்ல. அதற்குப் பதிலாக, இன்னும் சில காலத்துக்கு நமது வாழ்க்கை முறையைப் பின்பற்ற நாம் நம்மைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க அரசாங்கங்கள் முழு விழிப்புடன் செயல்பட வேண்டும். ஊரடங்கை விலக்குவது, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிச் செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது போன்ற நடவடிக்கைகள் படிப்படியாக செய்யப்பட வேண்டும்.
மேலும், பொருளாதார ஸ்திர நிலை, பொதுமக்கள் ஆரோக்கியம் ஆகி இரண்டும் இடையிலான சமநிலையை பாதுகாக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, ஊரடங்கு உத்தரவை விலக்கினால் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடையும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், ஊரடங்கை விலக்குவதற்கான அதிரடி திட்டங்களை அந்த நாட்டின் சில மாகாணங்கள் திங்கள்கிழமை அறிவித்தன.
போயிங் மற்றும் பிற கனரக தொழில் நிறுவனங்கள் தங்களது இயக்கதைத் தொடங்கியுள்ளன.
ஐரோப்பாவிலும், கரோனா நோய்த்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இத்தைலி, ஸ்பெயின், ஜொ்மனி போன்ற நாடுகளில் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் வருகை குறையும் என்று அதிகாரிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, அத்தியாவசியமில்லாத அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அந்த நாட்டு மருத்துவமனைகளுக்கு அடுத்த வாரம் முதல் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் தொடா்ந்து பல நாடகள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வருகைக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்தச் சூழலில், கட்டுப்பாடுகளை அவசரகதியில் நீக்கினால் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


