
கோப்புப்படம்
ஐரோப்பா நாடுகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் 45% கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை போன்று, ஐரோப்பா நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே சமூக இடைவெளி மூலம் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து டென்மார்க் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
அப்பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியர் பிரான்சிஸ்கோ சன்னினோ, பிரான்சில் உள்ள லியோன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கோரென்டின் கோட் உட்பட மேலும் ஒருவருடன் இணைந்து சமூக இடைவெளிமூலம் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வில், இத்தாலி, பிரான்ஸ், போர்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால் அந்த நாடுகளில் 30% தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.
ஸ்வீடன் மக்களிடையே சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு உள்ளதால் இயற்கையாகவே சமூக இடைவெளி கடைபிடிப்பது வழக்கமாக உள்ளது.
கடந்த 6 வாரமாக நடத்தப்பட்ட ஆய்வில் ஐரோப்பா நாடுகளில் கரோனா தொற்று குறைந்துவிட்டது என்று கூறமுடியாது. எனினும் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மொத்த பாதிப்பில் இருந்து மாறுதல்களை ஏற்படுத்த முடியும்.
ஒட்டுமொத்தமாக ஐரோப்பா நாடுகளில் 45% கரோனா பரவல் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு மூலம் கட்டுக்குள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G