
பெய்ஜிங்கில் இணையவழி புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு
பெய்ஜிங்கில் வரும் செப்டம்பர் மாதத்தில் இணையவழியில் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தற்போது இணைய வழியில் புத்தக கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கும் 27வது புத்தக கண்காட்சியை தேசிய பத்திரிகை மற்றும் பதிப்பக நிர்வாகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பெய்ஜிங் நகராட்சி நிர்வாகம், சீனாவின் பதிப்பக கூட்டமைப்பு மற்றும் எழுத்தாளர் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து நடத்த உள்ளது.
இந்த புத்தக கண்காட்சியில் மிகப்பெரிய தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக பதிப்பகத்தார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4,00,000 புத்தகங்கள் இணையவழி கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 1986-ஆம் ஆண்டிலிருந்து இணையவழியில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...