
ap20337021746764072854
பெய்ஜிங்: நிலவிலிருந்து கல், மண் ஆகியவற்றைத் தோண்டியெடுத்து, ஆய்வுக்காக அதனை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சாங்கி-5 விண்கலம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலவைச் சுற்றிவரும் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு அந்த ஆய்வுக் கலம் தரையிறக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் 20 நாள்களில் வலம் வரவிருக்கும் இந்த ஆய்வுக்கலம், அங்கிருந்து 2 கிலோ பாறைகள் மற்றும் துகள்களை சேகரித்து பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை சீனா 50 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...