
கோப்புப்படம்
ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 28,145 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கடந்த சில நாள்களாக ரஷியாவிலும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அந்த நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிததாக 28,145 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரஷியாவில் ஒரேநாளில் பதிவான உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,75,546ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரேநாளில் கரோனாவுக்கு 554 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 41,607ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 29,502 பேர் குணடைந்தனர். இதுவரை மொத்தம் 18,59,851 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...