
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, அதிபரைத் தேர்வு செய்யும் தேர்வாளர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஜோ பைடன் பெரும்பான்மைக்குத் தேவையான 270க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இதன்மூலமாக அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதை தேர்வாளர்கள் குழு உறுதி செய்துள்ளது.